எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, மார்ச் 25 - அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.15 மணிக்கு திருச்சி வந்தடைந்தார், விமான நிலையத்தில் ஜெயலலிதாவை திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன், திருச்சி எம்.பி. குமார் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி சங்கம் ஓட்டலுக்கு ஜெயலலிதா வந்தார். விமான நிலையத்திலிருந்து சங்கம் ஓட்டல் வரை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சித் தொண்டர்கள் கையில் கொடியேந்தி சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.
சிறிதுநேர ஓய்வுக்குப்பின் ஜெயலலிதா, காரில் திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டார். அவரை சங்கம் ஓட்டலில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை அ.தி.மு.க.வினர், தோழமைக் கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர். 10.58 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு ஜெயலலிதா வந்தார். அதைத்தொடர்ந்து 11.02 மணிக்கு தேர்தல் அதிகாரியான நிலச் சீர்திருத்தத்துறை துணை ஆணையர் குணசேகரன் ஜெயலலிதாவை வரவேற்றார். அங்கிருந்த ஊழியர்களும் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். பின்பு வேட்பு மனுத்தாக்கலுக்கான மனுவில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
பின் தேர்தல் அதிகாரி முன்னிலையில் ஜெயலலிதா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி குணசேகரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன், சசிகலா உடனிருந்தனர்.
சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின்பு சங்கம் ஓட்டலுக்குப் புறப்பட்டார். அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதா வாழ்க எனக் கோஷமிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


