முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகள் வரை கொடுக்கத் தயார் - ராகுல் காந்தி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “ ஆம் ஆத்மிகட்சியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைப்பதற்கு பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும்.

இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் இதற்கு உடன்படவில்லை. எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது” என கூறியுள்ளார். 

டெல்லியை பொறுத்த வரையில் கருத்துக்கணிப்புகள் அடிப்படையில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டால் அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து