எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பாரதீய ஜனதாவில் இருந்து விலகிய போது அத்வானி கண்ணீர் மல்க எனக்கு விடை கொடுத்தார் என்று சத்ருகன்சின்கா கூறி உள்ளார்.
சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரஸ் சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாரதீய ஜனதாவில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். வாஜ்பாயின் பேச்சைக் கேட்டு மனதை பறிகொடுத்து பா.ஜ.க.வில் சேர்ந்தேன். அப்போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது. இப்போது தனிநபர் ஆதிக்கம் வந்து விட்டது. எனவேதான் பா.ஜ.க.வில் இருந்து விலக முடிவு செய்தேன். இதற்காக அத்வானியை சந்தித்து ஆசி பெற்றேன். அப்போது அவர் எனக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தார்.
பா.ஜ.க.வில் இருந்து விலக வேண்டாம் என்று அவர் என்னை தடுக்கவில்லை. அதற்கு பதில் அவர் எனது அன்பு என்றென்றும் உண்டு என்று ஆசீர்வதித்தார். இப்போது நான் சரியான திசைக்கு வந்துள்ளேன். அந்த திசை நல்ல திசையாகவும் உள்ளது. அத்வானியை அவர்கள் மிகவும் அவமரியாதை செய்கிறார்கள். அதை தட்டிக் கேட்டதால் என்னை பணிய வைக்க முயற்சி செய்தனர். ஆனால் நான் பணியவில்லை. எனவே கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதிக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. மோடி மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக்கிறார். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று நம்புகிறார். 23-ம் தேதி அவருக்கு உண்மை தெரிந்து விடும். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எனது நண்பர்களில் ஒருவர். அவர் இரும்புப் பெண்மணி. அவர் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு சத்ருகன் சின்கா கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


