எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : ஐ.பி.எல்.-ஐ வைத்து கோலியை கணிக்காதீர்கள் என்றும் ஒருநாள் போட்டிகளில் அவரின் சாதனைகள் சிறப்பானவை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
வீரர்கள் பயிற்சி...
மே மாத 30ம் தேதி உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்கள் தற்போது தான் ஐ.பி.எல். தொடரை முடித்தனர். விரைவில் இந்திய அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கவுள்ளனர்.
அதிக வாய்ப்பு...
உலகக்கோப்பையை வெல்ல இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் பெரிதாக ஜொலிக்காத விராட் கோலி உலகக்கோப்பை போட்டிகளை எப்படி கையாளப் போகிறார் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
பாதிக்காதாம்...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, ஐ.பி.எல். தொடருக்கும், உலகக்கோப்பை தொடருக்கும் தொடர்பில்லை. விராட் கோலியின் ஐ.பி.எல். அனுபவங்கள் எக்காரணத்தை கொண்டும் உலகக்கோப்பையை பாதிக்காது. ஒருநாள் போட்டிகளில் கோலியின் சாதனைகள் சிறப்பாக இருக்கின்றன எனத் தெரிவித்தார்.
மாற்றக்கூடியவர்...
மேலும் அவர், ''இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும், அனுபவ வீரர் தோனி இருப்பதும் விராட் கோலிக்கு பலமாக இருக்கும். ஹர்திக் பாண்டியா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அவர் மிகமிக முக்கியமான பங்களிப்பை கொடுப்பார். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இங்கிலாந்து மைதானங்களில் திறமையான விளையாட்டை வெளிப்படுத்துவார்கள்.
நம்பிக்கை இல்லை...
இதைத்தான் பாகிஸ்தானின் கடந்த கால சாதனைகள் சொல்கின்றன. ஆனால் எனக்கு முன்பு நடந்த சாதனைகளில் நம்பிக்கை இல்லை. எந்த அணியாக இருந்தாலும் குறிப்பிட்ட நாளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணியை பொறுத்த வரை பலமாக இருக்கிறது. கோலி, தவான், தோனி, ரோஹித் போன்ற வீரர்களை வைத்திருக்கும் இந்தியாவை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


