Idhayam Matrimony

பிரான்சில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் காயம்

சனிக்கிழமை, 25 மே 2019      உலகம்
Image Unavailable

லியோன் : பிரான்சின் லியோன் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 13 பேர் காயம் அடைந்தனர்

பிரான்சு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான லியோன் நகரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். லியோன் நகரின் மையப் பகுதியில் விக்டர் ஹியூகோ வீதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பான ஒரு சந்தேக நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மதிவண்டி ஒன்றில் வைத்ததாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு தாக்குதல் என்பதை பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு பயங்கரவாத தொடர்பு இருக்குமா? கோணத்திலும் விசாரணை நடப்பதாக பிரான்சு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து மக்கள் வெளியேற்றபட்டு பிரான்சு ராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து