எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பிடிக்க முடியவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து அதனை காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ஆனால் ராகுல் அதற்கு சம்மதிக்கவில்லை. ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக இருந்தார்.
அதன்பிறகு ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்களும் ராகுலை சமரசம் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரை சமரசம் செய்ய சென்ற மூத்த தலைவர்களை அவர் சந்திக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில தலைவர்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநில காங்கிரஸ் ஆட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ராகுல் அவர்களிடம் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் அக்கறை காட்டாத சில மூத்த தலைவர்கள் பற்றி புகார் தெரிவித்ததுடன் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். தனது ராஜினாமாவை திரும்பபெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ராகுலை சந்தித்து சமரச முயற்சி மேற்கொண்டார்.
இந்தநிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக் கூடாது. இது கட்சிக்கு முக்கியமான காலகட்டம். ராகுல்காந்தி ராஜினாமா செய்வது காங்கிரஸ் கட்சிக்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அவர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பது நல்லது என்று கருத்து கூறினார்கள். ஆனாலும் ராகுல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். அவரது மனநிலை மாறவில்லை. நேற்று 5-வது நாளாக ராகுல் காந்தியின் பிடிவாதம் தொடர்கிறது. ராகுலை சமரசம் செய்வதற்காக ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு மாதிரியான யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள். ராகுல்காந்தி தலைவர் பதவியிலேயே நீடிக்கட்டும். மேலும் செயல் தலைவர் பதவியை உருவாக்கி செயல் தலைவர்களாக சிலரை நியமிக்கலாம். தலைவர் பொறுப்பை ராகுல் கவனித்தால் கட்சியின் மற்ற நடவடிக்கைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலக வேண்டாம் என்று யோசனை தெரிவித்தனர். ஆனால் அதற்கும் ராகுல் காந்தி உறுதியான பதிலை சொல்லவில்லை.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி விரைவில் கேரள மாநிலம் வயநாடு செல்ல இருக்கிறார். அவர் வயநாடு செல்வதை பொறுத்து மீண்டும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் காரிய கமிட்டி கூடுமா என்று தெரியவில்லை. அதற்கு பதிலாக ராகுல்காந்தியை சமரசம் செய்வதிலேயே மூத்த தலைவர்கள் பலர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் சமரசம் ஆகாமல் தொடர்ந்து பிடிவாதமாகவே இருக்கிறார். இதற்கிடையே பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர் அந்த பதவியில் நீடித்த படியே கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


