Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார் ராதாரவி

புதன்கிழமை, 12 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நடிகர் ராதாரவி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் நடிகர் ராதாரவி இணைந்தார். ராதாரவி, அ.தி.மு.க.வில் இணைந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார். நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக பேசியதால் தி.மு.க.வில் இருந்து ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

பதவிக்காக இல்லை

அ.தி.மு.க.வில் இணைந்த பின் நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் பதவி தருவதாக சொல்லி இருக்கிறார்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதலளித்த நடிகர் ராதாரவி, இல்லை. நான் எந்த காலத்திலும் பதவியை எதிர்பார்த்தது இல்லை. கேட்கும் திட்டமும் இல்லை.

நடிகர் சங்கம் வி‌ஷயமாக இப்போது சேலத்துக்கு சென்று கொண்டு இருக்கிறேன். வந்ததும் சில முக்கிய அறிவிப்புகள் தருகிறேன். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பிசியாக இருப்பதால் சரியாக பேச முடியவில்லை. சேலத்தில் இருந்து வந்த பிறகு மீண்டும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து