Idhayam Matrimony

குழந்தை பெற்ற 30 நிமிடத்தில் மருத்துவமனையில் தேர்வு எழுதிய பெண்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

அடிஸ் அபாபா : எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரோமியா பிராந்தியத்தில் உள்ள மெட்டு நகரை சேர்ந்த பெண் அல்மாஸ் டெரீஸ் (வயது 21). மேல்நிலை படிப்பு படித்து வரும் இவர், திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். இந்த நிலையில், பிரசவம் நடப்பதற்கு முன்னரே பள்ளி தேர்வுகளை எழுதி முடித்து விட வேண்டும் என தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை தேர்வு எழுத செல்வதற்கு முன்பு அல்மாஸ் டெரீசுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதே சமயம் குழந்தை பிறந்த காரணத்தால் பள்ளிப்படிப்பை கைவிட விரும்பாத அல்மாஸ் டெரீஸ், தேர்வுகளை எழுதுவதில் விடாப்பிடியாக இருந்தார். எனவே அவரது கணவர் தடீஸ் துலு, அல்மாஸ் டெரீஸ் படிக்கும் பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, மருத்துவமனையிலேயே அவர் தேர்வு எழுத ஒப்புதல் பெற்றார்.

அதன்படி குழந்தை பெற்றெடுத்த அரை மணி நேரத்துக்குள்ளாக மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே அல்மாஸ் டெரீஸ் தனது தேர்வுகளை எழுதினார். ஒரே நாளில் ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை அவர் எழுதினார். அடுத்த 2 நாட்களில் நடக்கும் தேர்வுகளை அவர் தேர்வு மையத்துக்குச் சென்று எழுத இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து