எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாவ் பாவ்லோ : கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது.
கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. தென்அமெரிக்க கண்டத்து அணிகளுக்கான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் பிரேசிலில் தொடங்கியது. இந்த போட்டியில் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகளுடன், ஆசிய கண்டத்தை சேர்ந்த ஜப்பான், கத்தார் ஆகிய அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளன. அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். அத்துடன் 3-வது இடத்தை பெறும் சிறந்த 2 அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
சாவ் பாப்லோவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) 8 முறை சாம்பியனான பிரேசில் அணி, பொலிவியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பிரேசில் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், பொலிவியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 50-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி நட்சத்திர வீரர் பிலிப் காட்டினோ அருமையாக முதல் கோலை அடித்தார். 53-வது நிமிடத்தில் சக வீரர் பிர்மினோ கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை பிலிப் காட்டினோ தலையால் முட்டி கோலாக்கினார்.
85-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மாற்று ஆட்டக்காரர் இவெர்டன் 3-வது கோலை அடித்தார். பொலிவியா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


