Idhayam Matrimony

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே. சின்ஹா நியமனம்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய நீர்வள ஆணையரான ஏ.கே. சின்ஹா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்திற்கு இடைக்கால தலைவராக, மத்திய நீர்வள ஆணையரான மசூத் உசேன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மசூத் உசேனை நீக்கி விட்டு சுதந்திரமாக செயல்படக் கூடிய நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக பதவி வகித்து வந்த மசூத் உசைன் அண்மையில் ஓய்வு பெற்றார். இதையடுத்து கடந்த வாரம் மத்திய நீர்வள ஆணையத் தலைவராக ஏ.கே. சின்ஹா நியமிக்கப்பட்டார். ஆனால் மசூத் உசேன் வகித்த காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பதவிக்கு யாரையும் மத்திய அரசு நியமிக்காமல் இருந்தது. இந்த சூழலில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஏ.கே. சின்ஹாவை காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து