Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்த கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம்?

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

கோவாவில் காங்கிரசில் இருந்து விலகிய 10 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சமீபத்தில் பதவி விலகினர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் 10 எம்.எல்.ஏ.க்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் 10 பேரும் முறைப்படி பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தற்போது 10 எம்எல்ஏக்கள் இணைந்ததன் மூலம், கோவா சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரசின் பலம் தற்போது 5 ஆக குறைந்துள்ளது.புதிதாக இணைந்துள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடமளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து