Idhayam Matrimony

ரபேல் போர் விமானம் அற்புதம்: இந்திய வீரர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியதாக பிரான்ஸ் தளபதி தகவல்

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படை வீரர்கள் இயக்கி பார்த்து அற்புதமாக இருந்தது என்று கூறியதாக பிரான்ஸ் விமானப் படையின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.

கருடா என்றழைக்கப்படும் இந்தியா - பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சியானது அந்நாட்டில் உள்ள மாண்ட் டி மார்சன் நகரில், கடந்த 1-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், இருநாட்டு விமானப் படைகளுக்கும் சொந்தமான 27 போர் விமானங்கள் பங்கேற்றன. இந்த பயிற்சி முகாமில் 300 வீரர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியின் போது பிரான்சின் ரபேல் போர் விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கினர். இந்த அனுபவத்தை, பிரான்ஸ் விமானப் படையின் தலைமை தளபதியிடம் அவர்கள் விவரித்துள்ளனர். ரபேல் போர் விமானத்தை இயக்கியது அற்புதமாக இருந்தது என்று இந்திய வீரர்கள் கூறியதாக பிரான்ஸ் விமானப்படை தலைமை தளபதி பிலிப் லாவின் கூறியுள்ளார்.

இரண்டு, மூன்று முறை பறந்த பிறகு, மிகவும் சவுகரியமாக உணர்ந்ததாகவும், எளிதில் கையாளும் வகையில் இருந்ததாகவும் இந்திய வீரர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் படவுரியா, பிரெஞ்சு விமானப்படையின் மோன்ட் டி மார்சன் விமானத்தளத்தில் ரபேல் விமானத்தில் பறந்தார். அவர் தனது அனுபவம் குறித்து கூறும்போது,

இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ரபேல் எங்கள் விமானப் படையில் சேர்க்கப்பட்டவுடன் அதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது அடிப்படையில் நல்ல அனுபவமாக இது இருந்தது. மேலும் சு -30 உடன் எவ்வாறு பயன்படுத்த முடியும், மற்றொரு சக்தி வாய்ந்த மற்றும் முக்கியமான போர் விமானமாக எங்கள் விமானப்படையில் இது இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து