Idhayam Matrimony

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து: மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அரசு உறுதி

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய இணை மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடாது என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என ஏற்கனவே முடிவு செய்து உள்ளது. எனினும் ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அசாம் அல்லது வேறு ஏதாவது மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இருக்கிறதா? என மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கேள்வி எழுப்பினார். மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகாதா? எனவும் அவர் வினவினார். இதற்கு மத்திய புள்ளியியல் துறை இணை மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் பதிலளிக்கையில், மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என உறுதிபட தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து