எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெஹ்ரான் : மூன்று மாதங்களுக்கு முன் சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பலை சவுதி அரேபியா விடுவித்துள்ளது.
சூயஸ் கால்வாய் நோக்கி 6 ஊழியர்களுடன் புறப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலான `ஹேப்பினஸ் 1, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, செங்கடல் பகுதியை கடந்த போது இன்ஜினுக்குள் கடல்நீர் புகுந்ததில் இன்ஜின் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து நின்றது. இந்த கப்பல் சவுதி அரேபியா கடலோர காவல்படையினரால் கடந்த மே மாதம் சிறை பிடிக்கப்பட்டது. இதன் பராமரிப்பு செலவாக ஈரான் நாளொன்றுக்கு 1.38 கோடி அளிக்க சவுதி வலியுறுத்தியது. இந்நிலையில், ஏறக்குறைய சிறைபிடிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் எண்ணெய் கப்பலை சவுதி விடுவித்தது. இது தொடர்பாக ஈரான் போக்குவரத்துத் துறை அமைச்சர் முகமது இஸ்லாமி கூறுகையில், சவுதியுடனான பேச்சுக்கு பின்னர் எண்ணெய் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அது பெர்சியன் வளைகுடாவை கடந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


