Idhayam Matrimony

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி குறைவு: ஆஸி. பிரதமர் அதிருப்தி

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலிய நாட்டில் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் மறுசுழற்சி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். ஆனால் அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டு சீர்குலைந்துள்ளது. வெறும் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒன்றரை மில்லியன் டன்கள் திடக்கழிவுகள் நம் நாட்டில் இருந்து மறுசுழற்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு நாம் தான் பொறுப்பு. திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை நாமே செயல்படுத்த வேண்டும் என்றார்.

தொழில் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் காரன் ஆண்ட்ரூஸ் கூறுகையில், திட மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவது மிக முக்கியமானதாகும். அதுவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முதல் வழியாகும். இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் நீள சாலை அமைப்பதற்கு 5 லட்சம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த முடியும். இதுபோன்ற சில புதுமையான யுக்திகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு வித்திட வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து