Idhayam Matrimony

சபரிமலை கோவிலில் நாளை நடை திறப்பு

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை : ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடை திறக்கப்படுகிறது. 21-ம் தேதி வரை நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக கடந்த 6-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 7-ம் தேதி நிறைபுத்தரிசி பூஜை ஐயப்பன் கோவிலில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்தநிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து நடைபெறும் தீபாராதனைக்கு பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்றைய சிறப்பு பூஜைகள் நடைபெறாது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மறுநாள் 17-ம் தேதி வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 21-ம் தேதி வரை 5 நாட்கள் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். 21-ம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் மாதம் 9-ம் தேதி திறக்கப்படும். தொடர்ந்து 13-ம் தேதி வரை ஓணம் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து