Idhayam Matrimony

இங்கிலாந்து நாடாளுமன்றம் முடக்கம்: அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க ஸ்காட்லாந்து நீதிமன்றம் மறுப்பு

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்து நாடாளுமன்றத்தை முடக்கிய அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க ஸ்காட்லாந்து நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு செய்து, பிரக்சிட் ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது. பல எம்.பி.க்களும் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய வலியுறுத்துகின்றனர். ஆனால், ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதை ஏற்கும் நிலையில் ஐரோப்பிய யூனியன் இல்லை. இதனால், நிர்ணயிக்கப்பட்ட அக்டோபர் 31-ம் தேதிக்குள் இதே ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தமே இல்லாமலோ, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது நிச்சயம் என அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதற்காக, செப்டம்பர் 2-ம் வாரத்திலிருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை நாடாளுமன்றத்தை அவர் முடக்கி உள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து எந்தவித ஒப்பந்தமும் இன்றி வெளியேற, போரிஸ் ஜான்சன் விரும்புகிறார். அதனால்தான், வரும் 3-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதன் செயல்பாட்டை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், ஜான்சனின் விருப்பத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போகும். எனவே, அரசின் இந்த முடிவுக்கு இடைக்கால தடை கோரி பல்வேறு எம்.பி.க்கள் ஸ்காட்லாந்து சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி ரேமண்ட் டோஹர்தி ,ஜான்சன் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தார். வழக்கை செப். 6-ல் விசாரிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து