Idhayam Matrimony

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினவிழா அ.தி.மு.க பொதுக்கூட்டம்:

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி கழகம் சார்பில் டி.கல்லுப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி கழகம் சார்பில் டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் அருகில்  பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினவிழாவினை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராம்சாமி,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி, முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்கள் தமிழழகன்,ஆண்டிச்சாமி,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன்,இலக்கிய அணி திருப்பதி,வழக்கறிஞர் அணி தமிழ்ச்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
திருமங்கலம் தொகுதி கழக நிர்வாகிகள்,பெண்கள்,தொண்டர்கள்,பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து எழுச்சியுடன் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்டகழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினவிழாப் பேருரையாற்றினார்.இதனை தொடர்ந்து தலைமைக்கழக பேச்சாளர்கள் சுறுசுறு சுப்பையா,ஏங்கல்ஸ்,சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான்(எ)செல்வம்,மாணிக்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஜெயராமன்,முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ம.முத்துராமலிங்கம்,தமிழரசன்,முன்னாள் மாவட்ட கவுன்சில் தலைவர் இளங்கோவன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் கண்ணன்,பாவடியான்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் செல்வமணி செல்லச்சாமி,பிரபுசங்கர்,கள்ளிக்குடி ஒன்றிய கழக நிர்வாகிகள் அவைதலைவர் வேல்பாண்டி,மாவட்ட பிரதிநிதி வேல்ராமகிருஷ்ணன்,சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா,திருமங்கலம் நகர் கழக அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைச் சேர்மன் சதீஸ்சண்முகம் ஆகியோரும்
திருமங்கலம் ஒன்றிய கழக நிர்வாகிகள் அவைதலைவர் அன்னக்கொடி,இணை செயலாளர் சுமதிசாமிநாதன்,துணை செயலாளர்கள்,சுகுமார்,சார்புஅணி நிர்வாகிகள் சிவன்காளை,நாகையாசாமி,ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,வளர்மதி அன்பழகன்,பழனிச்சாமி,சிவஜோதி தர்மர்,பிச்சைமணி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் இணைச்செயலாளர் நாகலட்சுமி,துணை செயலாளர் முத்துராஜ்,சார்புஅணி செயலாளர்கள் வக்கீல்.பாஸ்கரன்,ராமகிருஷ்ணன்,தங்கராஜ்,உரப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன், கழக நிர்வாகிகள் லட்சுமி,பரீதாபேகம்,மனோகரன்,நாகலட்சுமி,மீனாலட்சுமி,வில்லூர் சரவணன்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில் சம்பத்,தங்கராஜ்,ராமகிருஷ்ணன்,ஜெயராஜ்பாண்டியன் ஆகியோர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து