எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்தி அடிப்படையிலான ஊதியத்தை ஊக்கத்தொகையாக (போனஸ்) வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து 6-வது ஆண்டாக உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்திசார் ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 78 நாட்கள் உற்பத்தி சார் ஊக்கத்தொகை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் ரயில்வே வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்திசார் ஊக்கத்தொகை வழங்க நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
தசரா, தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்திசார் ஊக்கத் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு மூலம் ரயில்வேயில் 11 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


