Idhayam Matrimony

சவுதி வான் பாதுகாப்பை பலப்படுத்த வீரர்களை அனுப்பி வைக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் கிடங்கு உள்ளிட்டவை மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலால் அந்த ஆலையும், எண்ணெய் கிடங்கும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் எரிந்து நாசமாகி விட்டது. இந்தத் தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சி படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இருப்பினும், ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இந்த சூழ்நிலையில், சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ திடீர் பயணம் மேற்கொண்டார். பாம்பேயோ சுற்றுப்பயணத்தின் போது, அமெரிக்காவிடம் சவுதி அரேபியா ராணுவ உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதையேற்று, சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். வெர்ஜினியாவின் ஆர்லிங்கடனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, இந்தத் தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்தார். இதே போல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் தங்களை தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கு அந்நாடுகளுக்கு ராணுவ உபகரணங்களை அளிப்பது குறித்தும் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருவதாக மார்க் எஸ்பர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து