Idhayam Matrimony

தனிமையாகிறது தைவான் : ஒரே வாரத்தில் 2 கூட்டு நாடுகள் விலகல்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

தைபே : சீனாவின் அதிகார பலத்தால், தைவானுடன் தூதரக உறவை மேற்கொண்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. தற்போது, 2 நாடுகள் ஒரே வாரத்தில் விலகி இருக்கின்றன.

சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும், தைவானின் நிலப்பரப்பு, சீனாவுக்கு சொந்தமானது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக, தைவானை தனி நாடாக ஒரு சில நாடுகள் மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளன. தைவானில் கடந்த 2016-ல் அதிபராக சாய் இங்க் வென் பதவியேற்ற போது, சீனாவுடன் ஒன்றிணைய அந்நாட்டு அதிபர் ஜின்பிங் வேண்டுகோள் விடுத்தார். இதனை சாய் நிராகரித்ததால், தூதரக ரீதியாக தைவானை தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. பொருளாதார ரீதியாக பலமிக்க சீனா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தைவானை தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைக்கிறது.

அதன் அடிப்படையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தைவானுடனான உறவை துண்டிப்பதாக பசிபிக் நாடுகளில் ஒன்றான சாலமன் தீவு அறிவித்த நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு பசிபிக் நாடான கிரிபடியும் விலகி உள்ளது. கிரிபடியில் முதலீடுகள் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனது நட்பு நாட்டை விலகச் செய்து விட்டதாக தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுவரை 7 நாடுகள் தைவானை விட்டு பிரிந்துள்ளன. இதனால் தைவானுடன் தூதரக உறவை வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 15 ஆக குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து