Idhayam Matrimony

வரும் 26, 27-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26 மற்றும் 27 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். பொதுத்துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு வங்கி அதிகாரிகள் சங்கம் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்த நிலையில், வருகிற 26 மற்றும் 27-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம், இந்திய தேசிய வங்கி அலுவலர் மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளை இணைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26 (வியாழன்) மற்றும் 27-ம் (வெள்ளி) தேதிகளில், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும்  28 மற்றும் 29-ம் தேதி முறையே 4-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்களில் வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். மேலும்  ஏ.டி.எம்.களில் பணப்பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு வருகிற அக்டோபர் 22-ம் தேதி வங்கிகள் இணைப்புக்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு செவி சாய்க்காத பட்சத்தில் நவம்பர் மாதத்தில் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து