Idhayam Matrimony

துருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல் : சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது. சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது. இந்த தனி நாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர். இதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி அதிபர் எர்டோகனின் உத்தரவில் அந்நாட்டு ராணுவம் அமைதி வசந்தம் என்ற பெயரில் சிரியா நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குர்திஷ் போராளிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், துருக்கியின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு பயந்து குர்திஷ் மக்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் கடந்த 9-ம் தேதி முதல் கடந்த ஒரு வாரம் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 595 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து குர்திஷ்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரிய நாட்டின் அரசுப்படைகள் எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளது. இதனால் சிரியா மற்றும் துருக்கி இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து