எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வெற்றிகரமாக ஆட்டத்தை முடிப்பதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை பின்பற்ற விரும்புவதாக தினேஷ்கார்த்திக் கூறியுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அணி தான் ஆடிய 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணி கேப்டனும், சர்வதேச வீரருமான தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. பெங்கால் அணிக்கு எதிராக 62 பந்தில் 95 ரன்னும், மத்திய பிரதேசத்துக்கு எதிராக 28 பந்தில் 65 ரன்களும் குவித்து சாதித்தார். 20 ஓவர் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்திய அணியில் மீண்டும் இடம் பெறும் வகையில் தினேஷ் கார்த்திக் ஆட்டம் கவரும் வகையில் உள்ளது. இந்த நிலையில் தனது ஆட்டம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
கடைசி கட்டத்தில் சில ஓவர்கள் இருக்கும் போது அதிரடியாக விளையாடி ரன் குவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 4 வரிசையில் பேட் செய்து அதிக ரன்கள் எடுப்பது எளிதானது என்று எனக்கு தெரியும். ஆனால் நெருக்கடியில் இருக்கும் போது அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டோனி இந்திய அணிக்காக பல ஆண்டுகள் இதை செய்து இருக்கிறார். அவரையை நானும் பின்பற்றுகிறேன். ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் நடந்த 20 ஓவர் தொடர்களில் நான் அப்படி தான் ஆடி வந்து இருக்கிறேன். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் என்று சொல்லப்படுவதில் மகிழ்ச்சி தான். அதை நான் பலமாக கருதுகிறேன். தமிழக அணியில் ஷாருக்கான் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


