எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி வருகின்றனர்
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன் சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவு 2 மணியளவில் திடீரென சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம் உடைந்து தண்ணீர் சுரங்கத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்தைச் சேர்ந்த பணியாளர்கள், 5 எ.ம்.ஐ. -8 ஹெலிகாப்டர்கள், எம்.ஐ. -26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட விமானப் பிரிவும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டன. இந்நிலையில், ரஷ்யா நாட்டில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


