எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது,
இந்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அதே போல, அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மழை தொடரும் எனக் கூறினார். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


