எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரீனா துவிவேதி. இவர் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக உள்ளார். தேர்தல் நேரங்களில் இவர் தேர்தல் பணியாற்றச் செல்லும்போது மஞ்சள் நிற சேலையை அணிந்து செல்வது வழக்கம். இதுதொடர்பான புகைப்படங்கள் பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகும். இந்நிலையில், லக்னோ கண்டோன்மெண்ட் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரிலுள்ள மகாநகர் கல்லூரியில் ரீனாவுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நாளன்று வழக்கமாக மஞ்சள் நிற சேலையில் வரும் ரீனா, இம்முறை இளஞ்சிவப்பு (பிங்க்) நிற சேலையில் வந்தார். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அவர் பிங்க் நிற சேலையில் வந்ததை சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
இதுகுறித்து ரீனா துவிவேதி கூறும்போது, எனக்கு தற்போது 32 வயதாகிறது. எனக்கு இளமையிலேயே திருமணமாகி விட்டது. எனக்கு மகன் உள்ளார். இது வழக்கமாக என்னுடன் பணியாற்றும் சக ஊழியர் எடுத்த புகைப்படம்தான். அது வைரலாகி விட்டது. அதேசமயம், நான் பிரபலமாகி விட்டது மகிழ்ச்சியும் தருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்றார். இவருக்கு 15 வயதில் மகன் உள்ளான். 2013-ல் இவரது கணவர் காலமானதையடுத்து பொதுப்பணித் துறையில் இவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


