Idhayam Matrimony

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு அரபிக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகின. அதாவது, கடந்த 24-ம் தேதி அரபிக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று கியார் என்ற தீவிர புயலாக மாறியது. அதனை தொடர்ந்து  கடந்த 27-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது மகா என்ற புதிய புயல் சின்னமாக மாறியது.

இதனால், தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. இரண்டு, மூன்று நாட்கள் மழை பெய்தது. அதன் பிறகு மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த 4 நாட்களாக வெயில் கொளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. தற்போது அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(இன்று) புயலாக மாறும். இது வடக்கு ஒடிசாவை நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக (இன்று மற்றும் நாளை) 6,7 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து