Idhayam Matrimony

அயோத்தி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்க வேண்டும் - அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அயோத்தி நில விவகார வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், அது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி தொடர்பான சர்ச்சைக்குரிய நில வழக்கில் வரும் 17-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி அமைச்சர்களை அழைத்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, அமைச்சர்களிடம், அயோத்தி விவகாரத்தில் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்காமல் தவிர்த்து சமூகத்தில் ஒற்றுமையும், நல்லிணக்கமும் நிலவுவதைப் பாதுகாக்க வேண்டும். அயோத்தி விவகாரத்தில் வரும் தீர்ப்பு எந்தத் தரப்பினருக்கு வெற்றி, தோல்வி என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது என்று அறிவுரை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து