எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : 11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் உச்சி மாநாடு கூடுகிறது. புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த ஆண்டு 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார். ஐந்து நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது பற்றி அதில் விவாதிக்கப்படும் என வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார உறவுகள்) திருமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


