Idhayam Matrimony

டெல்லியில் பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் தொடர் போராட்டம்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

டெல்லியில் தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி, கோர்ட்டுகளை புறக்கணித்து வக்கீல்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.   

டெல்லியில் திஸ்ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் கடந்த 2-ந்தேதி போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விசுவரூபம் எடுத்து வருகிறது.
சாகெட் கோர்ட்டுக்கு வெளியே சீருடையில் இருந்த ஒரு போலீஸ்காரரை வக்கீல்கள் தாக்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் துரிதமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, போலீஸ்காரரை தாக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மிக அபூர்வ நிகழ்வாக டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் போராட்டம் நடத்தினர். 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டம், உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

இதன் இடையே 2-ந்தேதி நடந்த மோதலின்போது வக்கீல்கள்மீது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல்கள் நடத்தும் போராட்டம் 3-வது நாளை எட்டியது.  டெல்லியில் உள்ள 6 மாவட்ட கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் பணிக்கு செல்லாமல் கோர்ட்டுகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து