முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறு பந்தில் 6 சிக்ஸ் அடிக்க விரும்பினேன்: ரோகித் சர்மா

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ராஜ்கோட் : ராஜ்கோட் போட்டியில் அறு பந்தில் 6 சிக்சர்கள் விளாச விரும்பினேன் என்று ஹிட்மேன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 43 பந்தில் 85 ரன்கள் விளாசினார்.அவரது ஸ்கோரில் ஆறு சிக்சர்கள் அடங்கும். மொசாடெக் ஹொசைன் பந்தில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்தார். மூன்று சிக்சர்கள் அடித்தபோது மேலும் மூன்று சிக்சர்கள் அடிக்க விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், நான் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்த போது, மேலும் மூன்று சிக்சர்கள் அடிக்க முயற்சி செய்தேன். நான்காவது பந்தை நான் மிஸ் செய்யும் போது, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆப்-ஸ்பின்னர் பந்து வீசும்போது பந்து மிகப்பெரிய அளவில் திரும்பாது என்பது எனக்குத் தெரியும். அதனால் பந்து வரும்வரை க்ரீஸ் பகுதியில் நின்று பந்து விளாச முயற்சி செய்தேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து