முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் பூகம்பம்: 5 பேர் பலி

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

டெக்ரான் : ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரானின் அசெர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரை திடீரென பூகம்பம் தாக்கியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.17 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது. 8 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு பூகம்பம் உருவாகி இருந்தது. பூகம்பத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாகாண கவர்னர் முகமது ரிசா கூறுகையில், பூகம்பத்தினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளது. 41கிராமங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது என்றார். பூகம்பத்தில் சிக்கி 200 கால்நடைகள் உயிரிழந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து