எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த மாதம் நான்கு மாவோயிஸ்ட்டுகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே போல் 2016-ம் ஆண்டு கேரள முதல்வராக பினராய் விஜயன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இதுவரை ஏழு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கோழிக்கோடு அருகேயுள்ள வடகரா காவல் நிலையத்திற்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், மாவோயிஸ்ட நகர்ப்புற செயல் திட்டக் குழுவின் கபினிதல் பிரிவு துணைத்தலைவரான பேடர் மூஸா கையெழுத்திட்டுள்ளார். அந்த கடிதத்தில் ஏழு மாவோயிஸ்ட்டுகளின் மரணத்திற்கு காரணமான பினராய் விஜயனின் செய்கைக்கு உரிய தணடனை வழங்கப்படும் என்றும், மக்களை தவறாக நடத்தும் விதத்திற்காக பேரம்பரா காவல் நிலைய ஆய்வாளர் ஹரீஷிற்கும் தண்டனை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


