Idhayam Matrimony

கனடாவில் விமான விபத்தில் 7 பேர் பலி

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஒட்டாவா : கனடாவில் நடந்த விமான விபத்தில் 7 பேர் பலியாயினர்.   

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொராண்டோவில் இருந்து கிங்ஸ்டோன் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்த நிலையில் கிங்ஸ்டோன் நகரையொட்டி உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் விமானம் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.

இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து