Idhayam Matrimony

சென்னை அணி பயிற்சியாளர் ஜான் கிரிகோரி விடுவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : ஐ.எஸ்.எல். தொடரில் விளையாடும் சென்னையின் எப்.சி. அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து  ஜான் கிரிகோரி  விடுவிக்கப் பட்டுள்ளார்.

கடந்த 2017-18 சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கிரிகோரி (இங்கிலாந்து), முதல் தொடரிலேயே கோப்பையை வென்று முத்திரை பதித்தார். 2018-19 சீசனில் சென்னை அணி கடைசி இடம் பிடித்தாலும், நடப்பு தொடரிலும் அவரே பயிற்சியாளராக தொடர்ந்தார். தொடக்க லீக் ஆட்டங்களில் அணியால் பெரிதாக சாதிக்க முடியாததால், ராஜினாமா முடிவை அறிவித்தார் கிரிகோரி. ஆனால் அவரையே பயிற்சியாளராக தொடர அணி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு பலனும் இருந்தது.சென்னையில் நடந்த 5-வது போட்டியில் 2-1  என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பெற்ற அணி அடுத்த போட்டியில்  2-2 என் டிரா செய்தது.

இந்நிலையில், நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கிரிகோரியின் சேவைக்கு மனமார்ந்த நன்றி. எங்கள் அணி 2-வது முறையாக ஐ.எஸ்.எல்.  கோப்பையை வெல்லவும், ஏ.எப்.சி. கோப்பைக்கு  தகுதி பெற்ற முதல் ஐ.எஸ்.எல்.  அணியாகவும் மாறக் காரணமாக இருந்தவர் அவர். அவர் எதிர்காலம் சிறப்பாக அமைய  எங்கள் நிர்வாகம் சார்பாக வாழ்த்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து