Idhayam Matrimony

தெலுங்கானா என்கவுன்ட்டர் சம்பவம்: விசாரணையைத் தொடங்கியது மனித உரிமைகள் ஆணையம்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நேற்று ஐதராபாத் வந்தனர்.

முதலில் அவர்கள், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற இடமும், என்கவுன்ட்டரில் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடமுமான ஷத்நகரின் சடன்பள்ளி கிராமத்தில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துகின்றனர். சம்பவ இடத்துக்கு செல்லும் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், என்கவுன்ட்டர் எப்படி நடந்தது என்பது பற்றி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில், என்கவுன்ட்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், நான்கு பேரின் உடல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து, உடல்களை ஆய்வு செய்யவிருக்கும் அதிகாரிகள், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளனர். அதோடு, பெண் மருத்துவர் கடத்தப்பட்ட டொண்டுபள்ளி சுங்கச்சாவடிக்கும் நேரில் வந்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து