Idhayam Matrimony

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல்?

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மசோதா நாட்டு நலனுக்கானது, எந்த மதத்தினரும் கவலைப்படத் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். ஆனால், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் நீண்ட விவாதத்துக்குப்பின் மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இதில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 105 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. இதில் பா.ஜ.க.வுக்கு 81 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோன்மணி அகாலிதளம் 3 உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு எம்.பி. நியமன எம்.பி.க்கள் 11 பேர் என 105 பேர் ஆதரவு இருக்கிறது. இன்னும் 15 எம்.பி.க்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு தேவை. இந்த 15எம்.பி.க்கள் ஆதரவைப் பெறுவதற்காக அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். உள்ளிட்ட கட்சிகளுடன் பா.ஜ.க. பேசி வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிவசேனா கட்சியும் ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளது. ஒருவேளை குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு இந்த கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான அளவைக் காட்டிலும் எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் என்பதால், எளிதாகக் குடியுரிமைத் திருத்த மசோதாவை பா.ஜ.க. நிறைவேற்றும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து