எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா உயிரிழந்த வழக்கை தமிழக அரசு விரும்பினால் சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த தகவலின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே 2006 முதல் தற்போது வரை சென்னை ஐ.ஐ.டி.யில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கேரளாவை சேர்ந்த சலீ்ம் என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா வழக்கை, தமிழக அரசு விரும்பினால் சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைக்கலாம் என்றும், ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


