எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 18-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாதிகள் 5 பேர் இயந்திர துப்பாக்கிகளுடன் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வரிசையாக அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பின்னர், பாராளுமன்றத்திற்கு ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினரும், பாராளுமன்ற பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் டெல்லி காவல்துறையினர் 5 பேர், மத்திய ரிசர்வ் காவல்படை பெண் காவலர், பாராளுமன்ற பாதுகாவலர்கள் இருவர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, வீரமரணம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் பாராளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரும் உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். கடந்த 2001-ம் ஆண்டு தாக்குதலுக்குப் பிறகு பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


