முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவது நியாயமானதல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இதுபோல ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்நிலையில், ஜோ பிடனின் மகன் ஹன்டருக்கு சொந்தமான உக்ரைனில் செயல்படும் நிறுவனம் மீதான ஊழல் புகாரை விசாரிக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத் ததாக புகார் எழுந்துள்ளது. இதற்காக அந்நாட்டுக்கான ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்ததாகவும் ஜோ பிடனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட டிரம்ப் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இந்தப் புகார் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் (கீழவை) நீதிக் குழு, விசாரணை நடத்தியது.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு, டிரம்ப் மீது கீழவையில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், டிரம்ப் அடுத்தடுத்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக 2 மணி நேரத்தில் 123 முறை கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி ஊடகங்களையும் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பான ஒரு பதிவில், நான் எந்தத் தவறும் செய்யாத நிலையில், எனக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவது நியாயமானதல்ல. நம் நாட்டின் வரலாற்றில் சிறப்பான பொருளாதாரத்தை உருவாக்கி உள்ளேன். ராணுவத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளேன். வரியைக் குறைத்துள்ளேன். வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளேன். இதுபோல எவ்வளவோ செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். கீழவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்ப தால் அங்கு இந்தத் தீர்மானம் நிறைவேற வாய்ப்பு உள்ளது. அடுத்தபடியாக செனட் சபையில் தீர்மானம் கொண்டு வரப்படும். அங்கு குடியரசு கட்சிக்கு பெரும் பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து