Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 48 குறைந்தது

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், நேற்று தங்கம் விலை  சற்று குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 3692 ஆக இருந்தது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் குறைந்துள்ளது. அதே போல, 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 48 ரூபாய் குறைந்து  29,536-ரூபாய்க்கு விற்பனையானது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 3,877 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 31,016 ரூபாயாகக் குறைந்தது. தூய தங்கத்தின் விலையும் 8 ரூபாய் சரிவு கண்டிருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 49.80 ரூபாயிலிருந்து 50.40 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதே போல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 49,800 ரூபாயிலிருந்து 600 ரூபாய் அதிகரித்து 50,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து