Idhayam Matrimony

சாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

சாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில போக்குவரத்து அமைச்சர்களுக்கும் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் 18–வது கூட்டமும், போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 39–வது கூட்டமும் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்காரி தலைமை தாங்கினார். அனைத்து மாநில போக்குவரத்து அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிதின் கட்காரி பேசியதாவது:-சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஒரு கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வருகிற நாட்களில் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளது. இதில் எந்த பற்றாக்குறையும் இல்லை. எனவே செலவை பற்றி கவலைப்படாமல் சாலை பாதுகாப்புக்காக அனைத்து மாநில துறைகளும் இணைந்து ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற அனைத்து மாநிலங்களுக்கும் ஒத்துப்போகிற ஒரு அணுகுமுறை மட்டுமே இப்போதைய தேவையான உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் 36 சதவீத முன்னேற்றமும், மாநில நெடுஞ்சாலைகளில் 26 சதவீத முன்னேற்றமும் ஏற்படும் வகையில் திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அவற்றை பழுதுபார்க்கும் பணிகள் விரைவாக நடைபெற வேண்டும். சாலைகளை ஆய்வு செய்யும் பணிகளில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களையும், பொறியியல் மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். சாலை பொறியியலை மேம்படுத்துவதற்கு ரூ. 14 ஆயிரம் கோடியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து