எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க் : கிராமி விருதுகள் விழாவில் அமெரிக்காவை சேர்ந்த இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்தார்.
சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 62-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. 15 முறை கிராமி விருதினை வென்றவரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் இசைக்கலைஞருமான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோபே பிரயண்ட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்தார். அவரது மூத்த சகோதரரான பின்னியாஸ் ஓகோனெல் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை பெற்றார்.பில்லி எல்லிசுக்கு அடுத்தபடியாக அமெரிக்க பாடகி லிசோ 3 பிரிவுகளில் கிராமி விருதுகளை வென்றுள்ளார். புகழ்பெற்ற பாடகியான லேடி காகா, காட்சி ஊடகத்தில் (விசுவல் மீடியா) சிறந்த பாடலை எழுதியதற்காக கிராமி விருதை வென்றார். கடந்த ஆண்டும் இதே பிரிவிலும், சிறந்த பாப் இரட்டையர் மற்றும் குழு பாடலுக்கான கிராமி விருதுகளை வென்றவரான லேடி காகா, இம்முறை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பிகமிங் என்ற பெயரில் தனது சுயசரிதையை ஒலிப்புத்தகமாக வெளியிட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல்லே ஒபாமாவுக்கு, சிறந்த பேசும் சொல் என்ற பிரிவில் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஒபாமா இதே பிரிவில் 2 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


