முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர் : பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சக வீரர்களை மேட்பிக்ஸிங், ஊழலில் ஈடுபடத் தூண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஜாம்ஷெட் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரிட்டிஷ் நேஷனல் கிரைம் ஏஜென்ஸி விசாரித்து வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு வங்கதேச சூப்பர் லீக், 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சக வீரர்களை மேட்ச் பிக்ஸிங், ஊழலில் ஈடுபடத் தூண்டியதாக ஜாம்ஷெட் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2017- பிப்ரவரி மாதம் ஜாம்ஷெட், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூசுப் அன்வர்(36), முகமது இசாஜ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட அன்வர், இஜாஸ் இருவரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு பணம் கொடுத்து மோசமாக விளையாடத் தூண்டினோம், மேட்ச் பிக்ஸிங் ஈடுபட முயன்றோம் எனும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனால், இஜாசுக்கு 30 மாதங்களும், அன்வருக்கு 40 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டியில் தான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என்று தொடக்கத்தில் கூறி வந்த ஜாம்ஷெட் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் வீரர்களிடையே கையூட்டு பெறுவதை ஊக்கப்படுத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஜாம்ஷெட் தடைவிதிக்கப்பட்டார். அதற்கு முன்பாக 2017-ம் ஆண்டில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த குற்றத்துக்காக 12 மாதங்கள் தடையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் இடதுகை பேட்ஸ்மேனான ஜாம்ஷெட், 2 டெஸ்ட், 48 ஒருநாள் போட்டிகளிலும், 18 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 48 ஒருநாள் போட்டிகளில் 1418 ரன்களும் சேர்த்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து