எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதல் நடைபெற்றதன் முதலாமாண்டு நினைவு தினமான நேற்று அந்த சம்பவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்ந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். ‘கடந்த ஆண்டு புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்கள் நம் தேசத்திற்கு சேவை செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த விதிவிலக்கான நபர்கள். இந்தியா அவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்காது’ என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


