எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : இந்தியாவிற்காக பிரதமர் மோடி இரவும், பகலும் உழைக்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பிறகு டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். குரங்கு பொம்மைகள் சொல்லும் பாடம் குறித்து ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கினார். காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப். பின்னர் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு வந்தடைந்தார் அதிபர் டிரம்ப். அவர்கள் வந்த வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பிரதமர் மோடியும், டொனால்டு டிரமப்பும் மேடைக்கு வந்தனர். பிறகு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. பிரதமர் மோடி முதலில் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நமஸ்தே என கூறி தனது பேச்சை தொடங்கினார். பேச்சை முடிக்கும் போது இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறி முடித்தார்.
முன்னதாக டிரம்ப் பேசியதாவது:-
5 மாதங்களுக்கு முன்பு டெக்சாஸில் உள்ள ஒரு மாபெரும் கால்பந்து மைதானத்தில் அமெரிக்கா உங்கள் மாபெரும் பிரதமரை வரவேற்றது. இன்று அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் எங்களை வரவேற்கிறது இந்தியா. இந்த விருந்தோம்பலை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். இந்தியா நம் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிக்கும்.இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்க திகழும் பிரதமர் மோடி 'டீ வாலா ' என்று தனது வாழ்வை தொடங்கினார். அவர் தேநீர் விற்பனையாளராக பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள். ஆனால் இதை நான் உங்களுக்குச் சொல்வேன். அவர் மிகவும் கடினமானவர்.அன்று டீ விற்றவர். இன்று நாட்டின் பிரதமர் மோடி நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டும் அல்ல, கடின உழைப்பு மற்றும் பக்தியால், இந்தியர்கள் எதையும், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக வாழ்கிறீர்கள். இந்தியாவிற்காக பிரதமர் மோடி இரவும் பகலும் உழைக்கிறார். இணையதளம், சமையல் எரிவாயு இணைப்பை நாடு முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் பிரதமர் மோடி என்று புகழ்ந்தார் டிரம்ப். மேலும் பேசிய டிரம்ப் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் விராட் கோலி என்று புகழ்ந்து பேசினார். இந்தி திரைப்படங்கள் உலகம் முழுவதும் விரும்பி பார்க்கப்படுகிறது என்று கூறிய அவர் இந்திய மக்கள் ஒற்றுமையோடு வாழ்வதாகவும் பாராட்டி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


