எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கிறைஸ்ட்சர்ச் : இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. சரிவில் இருந்து எழுச்சி பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதலாவது டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியா 200 ரன்களை கூட (165 மற்றும் 191 ரன்) தொடவில்லை. மயங்க் அகர்வால், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆடினர். மற்றவர்கள் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் சரணாகதியானார்கள்.இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது தான். ஏற்கனவே டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி அச்சுறுத்திய நிலையில் ‘ஷாட்பிட்ச்’ மன்னன் நீல் வாக்னெரும் நியூசிலாந்து அணியுடன் இணைந்துள்ளார்.
இவர்களின் புயல்வேக தாக்குதலுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுத்து ஆடுவதை பொறுத்தே ஸ்கோரின் போக்கு அமையும். இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் அவர் பயிற்சிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. பேட்டிங்கை வலுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நீக்கிவிட்டு, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்கிறது. கேப்டன் விராட் கோலி கடைசியாக ஆடிய 20 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலியின் தடுமாற்றமும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இந்திய துணை கேப்டன் ரஹானே நிருபர்களிடம் கூறஉகையில்,
நாம் இன்னும் அதிக ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் மனஉறுதியும், தெளிவான மனநிலையும் இருந்தால் போதும். அதுவே உதவிகரமாக இருக்கும். வெலிங்டனில் நடந்ததை நாம் மறக்க வேண்டும். முந்தைய டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பாடம் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறோம். அந்த கோணத்தில் தான் பயிற்சியிலும் ஈடுபடுகிறோம். ஆடுகள சீதோஷ்ண நிலை குறித்தே தொடர்ந்து சிந்தித்து கொண்டிருக்கக் கூடாது. அவற்றை தாண்டி அத்தகைய சூழலில் ரன் எடுப்பது எப்படி என்பதை பார்க்க வேண்டும்.இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது.
இங்கு ஒரு டெஸ்டில் நாம் வெற்றி பெற்றாலும் 60 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெகுதூரம் முன்னேறி விட முடியும். அதனால் தான் முதலாவது டெஸ்ட் தோல்வியை மறந்து விடுங்கள் என்று சொல்கிறேன். இதே மைதானத்தில் இந்திய ‘ஏ’ அணி கடந்த மாதம் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆடியது. அதில் விளையாடிய ஹனுமா விஹாரி (அந்த ஆட்டத்தில் 51 மற்றும் 100 ரன்கள் எடுத்தார்) இந்த ஆடுகளம் வெலிங்டனை விட நன்றாக இருக்கும் என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார். இந்த ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் இருக்கும். முதல் நாளிலேயே ஆடுகளத் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாட வேண்டும்.அஸ்வின், ஜடேஜா இருவரில் யார் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று கேட்கிறீர்கள். அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருவருமே தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். யாரை நீக்கினாலும் அது கடினமான முடிவாகத் தான் இருக்கும். இவ்வாறு ரஹானே கூறினார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை உள்ளூரில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் தீவிர முனைப்பு காட்டுகிறார்கள். இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 6 டெஸ்டுகளில் நியூசிலாந்து 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. இந்த மைதானத்தில் விக்கெட் வேட்டையில் டிரென்ட் பவுல்ட் (37 விக்கெட்), டிம் சவுதி (32 விக்கெட்), நீல் வாக்னெர் (23 விக்கெட்) ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஜாலம் நீடிக்குமா அல்லது இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: மயங்க் அகர்வால், சுப்மான் கில் அல்லது பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி.
நியூசிலாந்து: டாம் லாதம், டாம் பிளன்டெல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிரான்ட்ஹோம், நீல் வாக்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் அல்லது அஜாஸ் பட்டேல்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 4 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் 4 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.