Idhayam Matrimony

விபத்தில் பலியானவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.31 - சென்னையில் காவல்துறை வாகனத்தை பின்னோக்கி நகர்த்தியதில் பலியானவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:. 25.5.2012 அன்று சென்னை, மெரினா கடற்கரை அருகே உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில்  மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  காவல் துறை வேனை அதன் ஓட்டுநர் பின்னோக்கி நகர்த்தியதில், மரத்தின் கீழ் படுத்துறங்கிய திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் 6-வது தெருவைச் சேர்ந்த லோகநாதன்  என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்தத் துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த  லோகநாதனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் காலமான லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, கவனக் குறைவாக  வாகனத்தை  இயக்கி,  விபத்து  ஏற்படுத்திய, காவல் துறை  ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago