Idhayam Matrimony

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை - சென்னையில் சவரனுக்கு ரூ. 96 அதிகரிப்பு

திங்கட்கிழமை, 2 மார்ச் 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து சவரன் ரூ. 31.984-க்கு விற்பனையானது.

நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அதாவது, கடந்த 17-ம் தேதி ஒரு சவரன் 31,216-க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 18-ம் தேதி ரூ. 31,408, 19-ம் தேதி ரூ. 31,720, 20-ம் தேதி ரூ. 31,824-க்கும், 21-ம் தேதி ரூ. 32,408, 22-ம் தேதி ரூ. 32,576-க்கும் விற்பனையானது.

கடந்த 24-ம் தேதி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, கிராம் ரூ. 4,166-க்கும், சவரன் ரூ. 33,328-க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது. 25-ம் தேதி ஒரு சவரன் ரூ. 32,736, 26-ம் தேதி ரூ. 32,640, 27-ம் தேதி ரூ. 32,512-க்கும் விற்பனையானது. 28-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 4064-க்கும், சவரன் ரூ. 32,512-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் 29-ம் தேதி தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ. 78 குறைந்து ஒரு கிராம் ரூ. 3,986-க்கும், சவரனுக்கு ரூ. 624 குறைந்து ஒரு சவரன் ரூ. 31,888-க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியது. தொடர்ச்சியாக கடந்த சில நாட்களில் மட்டும் சவரன் ரூ. 848 அளவுக்கு குறைந்தது. தொடர்ந்து சரிந்து வந்ததால், நேற்று தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.31.984-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ. 3,998-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல், சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 1,000 உயர்ந்து ரூ. 48,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து